திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கழண்டு ஓடிய பஸ் டயர்களால் விபத்து ஏற்படாமல் பயணிகள் தப்பி உள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்து காக்கா தோப்பூர் பிரிவு அருகே வந்த பொழுது திடீரென பேருந்தின் பின்பக்கம் இரண்டு டயர்களும் கழண்டு ஓடியது.

பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். சுதாரித்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.
கழண்ட இரண்டு டயர்களில் ஒரு டயர் பஸ்ஸை முந்திக்கொண்டு நான்கு வழிச்சாலையில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.