குரோம்பேட்டையில் இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பில் இராமகோபாலன்ஜி அவர்களின் 5 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கினர்.

இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பில் இராமகோபாலன்ஜி 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே தாம்பரம் சட்டமன்ற தொகுதி தலைவர் ரஜினி வேலு தலைமையில் மலர்கொடி, கோபி, வளர்மதி, விஜயலட்சுமி முன்னிலையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து புரட்சி முன்னணி நிறுவன தலைவர் எம்.கே.எஸ் சந்திரகுமார், இந்து திராவிட மக்கள் கட்சி தேசிய தலைவர் டாக்டர் ரமேஷ் பாபுஜி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.