தமிழ்நாடு அரசால் 2025-ஆம் ஆண்டில் புதியதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு)-யின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் தரத்தினை மதிப்பீடு செய்வதற்காக, தரமதிப்பீடு (Grading ITI) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 350 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுவிக்கப்படும் தரம், பயிற்சியாளர்களின் தேர்ச்சி விகிதம், பயிற்சியாளர்களுக்கு உடனுடக்குடன் பெற்றுத்தரப்படும் வேலைவாய்ப்பு, அதிகபட்ச ஊதியத்தில் பயிற்சி முடித்தவுடன் பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருதல், அரசால் அறிமுகப்படுத்தப்படும்.

பயிற்சியாளர்களுக்கான திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்துதல் ஆகிய பணிகளின் செயல்பாட்டினை தரமதிப்பீடு செய்த நேர்வில், மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் 88.5/100 என்ற மதிப்பீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தரமதிப்பீட்டில்(Grading ITI) முதலிடம் பெற்றதற்கான சான்றிதழை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணுசந்திரனிடமிருந்து மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் சை.ரமேஷ்குமார் பெற்றுள்ளார்.