மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 5ம் நாள் நிகழ்வில் “ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்” என்ற தலைப்பில், சுபஸ்ரீ தமிழாசிரியை, வரிச்சியூர். திட்ட மாணவர்களுக்கு 500 வகையான மூலிகைகளின் மகத்துவத்தை எடுத்துரைத்து, மூலிகைச் செடிகளை பரிசளித்தார்.

தொடர்ந்து திட்ட மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.பிறகு, “கவிதையும், கானமும்” என்ற தலைப்பில் பார்பரா, திட்ட மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை நாடகம், நடனம் மற்றும் கவிதை வழியே கற்பித்தார்.