மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக மாடக்குளம் இருந்து வருகிறது.
சினிமா கலாச்சாரம் விளையாட்டு விவசாயம் என அனைத்திலும் கொலோசி இருக்கும் இந்த பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

சினிமா துறையில் ஸ்டன்ட் கலைஞர்களாக விளங்கிய அழகர்சாமி தர்மலிங்கம் ரவி இப்படியாக எம்ஜிஆர் காலம் தொட்டு கரகாட்டக்காரன் திரைப்படம் வரை ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்தவர்களைக் கொண்ட பகுதி தான் இந்த கிராமம் இந்த பகுதியில் வீற்றிருந்து அருள்பாளிக்கக்கூடிய அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் கோவில் 123 வது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு ரசித்து கொண்டாடி வரக்கூடிய வேலையில்

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய வள்ளி திருமண நாடகம் நேற்று நடைபெற்றது
முன்னதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் அருகில் இருக்கக்கூடிய மைதானத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
குறிப்பாக உறுதிமொழி எடுக்கும்போது விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஏர் கலப்பை மண்வெட்டி உள்ளிட்டவைகளோடு நின்று கொண்டு
விவசாயத்தை காப்போம் விவசாயிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களையே வாங்குவோம் விவசாயம் குறித்து நம் சந்ததியினருக்கு எடுத்து உரைப்போம்
விவசாயம் சார்ந்த உதவியை வருடத்தில் ஒரு விவசாயிக்காவது செய்வோம்
வாழ்க விவசாயி வளர்க விவசாயம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

குறிப்பாக இன்றைய சூழலில் விவசாயம் மெல்ல குறைந்து வரக்கூடிய வேலையில் இளம் தலைமுறையினருக்கும் எடுத்துக் கூறும் வகையில் விவசாய பொருட்களோடு மாடக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்று கூடி நவராத்திரி திருவிழாவின் போது உறுதிமொழி எடுத்துக் கொண்டது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது