• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

காஞ்சி மகாபெரியவர் அனுஷ உற்சவம்..,

ByKalamegam Viswanathan

Sep 28, 2025

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகாபெரியவர், உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்களால் நடைபெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.

இதை தொடர்ந்து மதுரகலா மணி”, முனைவர் ரங்கநாயகி சச்சிதானன்தன் பாட்டு
“மதுரகலா மணி” தே. சச்சிதானன்தன் வயலின் “மதுரகலா மணி” முனைவர் கா. தியாகராஜன் மிருதங்கம் ஆகியோரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது‌

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.