வாக்கு திருட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில், நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்கு திருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியும், வாக்கு திருட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்திற்கு நாடு முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி, உசிலம்பட்டி தொகுதி தலைவர் சரவணக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும், பொதுமக்களும் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.