• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேனி நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்..,

BySubeshchandrabose

Sep 26, 2025

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரம் தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.

மதுரை:- தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு

இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.

இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்களை செய்து பயன்படுத்தி வருவதால்,

100 அடியுள்ள சாலையின் அகலம் 20 அடிகள் வரை குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து வருகின்றனர்

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில்

மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி வருவாய்துறையினருக்கு உத்தரவிட்டது

இதையடுத்து இன்று உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக

ஆண்டிபட்டி வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை துறையினர் நிலஅளவை துறையினர் மின்துறையினர் என அனைவரும் சேர்ந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர்.

இப்பணிகள மூன்று நாட்கள் வரை நீடிக்கும் என்றும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்பு சாலையின் அகலம் அதிகரித்து தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.