மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் 200 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.,

இந்த வழியாக ஊரணி மேட்டுத்தெரு பகுதிக்கும் செல்ல வேண்டிய சூழலில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி கால்வாய் பாதையை தனிநபர் பட்டா இடத்தில் உள்ளதாக கூறி தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பாதையை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.,
இந்த சாலை மறியலால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,