மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கேசவன்பட்டியைச் சேர்ந்த பவுன்தாய் என்ற மூதாட்டி குடும்பபிரச்சனை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த தனது மகனின் மாமனார் ஜெயராமன் மீது செக்காணூரணி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23 ம் தேதி புகார் அளித்துள்ளார்.,

இந்நிலையில் இதுவரை புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,
இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் இன்று பாஐக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செக்காணூரணி காவல் நிலையம் முன்பு மதுரை- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.,
காவல் துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பாஜகவினர் செக்காணூரணி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.,