திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலையிலும்,இன்று மக்கள் ஆட்சியிலும்,
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவில்கள் விழாக்களில் அலங்கரித்த யானை பங்கேற்பு இன்றும் தொடர்கிறது.

குருவாயூரப்பன் கோயில் பூரம் திருவிழாவில் இன்றும் 100_க்கு அதிகமான யானைகள் பங்கேற்கிறது.
திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க.
குமரி மாவட்டம் சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து தெய்வ விக்கிரங்களின் திருப்பயணம், காலம் காலமாக நடக்கும் நிலையில்,

இரண்டு நாட்களுக்கு முன் தமிழகம் பகுதியான பத்மநாபபுரத்தில் இருந்து விக்கிரகங்கள் சென்ற தினத்தில் அந்த ஊர்வலத்தில் யானை பயன் படுத்திய போது. குமரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள்,பொது நிலையினர்,
தமிழகத்தில் உள்ள இந்து கோவில் விழா மட்டும் அல்ல, எந்த பொது நிகழ்ச்சிகளில் யானையை பயன் படுத்த கூடாது என “வனத்துறை” தடை விதித்துள்ளது எத்தகைய நிலை என்ற வினா பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்ட நிலையில்.

சமயபுரம் ஜெயா என்கிற யானை வெளியூரில் இருந்து லாரி மூலம் இன்று (செப்டம்பர்_24)ம் தேதி காலை, கன்னியாகுமரி வந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 10_நாட்கள் நவராத்திரி விழாவில் பங்கேற்க யானையை அனுமதித்துள்ளது தமிழக அரசின் அறநிலையத் துறை 10 நாட்கள் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் விழாற்கு யானைக்கு வாடகையாக ரூ.5_லட்சம் கொடுக்கிறது. இந்த வரிசையில் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் யானை வாடகை வகையில் ரு.1லட்சம்
நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி சர்க்கரை குளம் அருகே இருக்கும் கிணற்றில் இருந்து புனித நீர் அம்மன் அபிஷேகத்திற்கு எடுத்து யானை மீது அமர்ந்து செல்லும் நிகழ்வில்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர், மற்றும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ், அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் எம் ஆர்.காந்தி, குமரி பகவதியம்மன் கேவில்
மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், திமுகவின் நகராட்சி வார்ட் கவுன்சிலர்கள், பாஜகவின் மாவட்ட தலைவர் கோபகுமார் உட்பட பல்வேறு அமைப்பினர்கள் பங்குபெற்றார்கள்.
