தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்த போது மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவருடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உடன் வந்தனர். ஆட்சியர் அலுவலக முகப்பு வாசலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்து விட்டு ஆய்வு நடக்கும் அரங்கிற்குள் வந்தவர் அனைவருக்கும் வணக்கம் கூறினார்,அவருடன் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா,காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உடன் இருந்தனர். புகைப்படக்காரர்கள், புகைப்படம் எடுத்த பிறகு புகைப்படக்காரர்கள் மற்றும் செய்தியாளர்கள் அங்கிருந்து கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டனர். ஒருமணி நேரம் ஆய்வுக்கு பின்னர் சாத்தூர் கிளம்பி சென்றார்.

