தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் மாற்றுத்திறனாளியான இவர் சின்னமனூர் அருகே உள்ள பண்ணைபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஏக்கர் 19 சென்ட் இடத்தை வாங்கியுள்ளார்

இந்த நிலையில் தான் வாங்கிய இடத்தில் சில மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்களை வெளியேற கூறும் போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மனைவியுடன் போராட்டம் நடத்துவதற்கு வருகை தந்திருந்தார். அப்போது தான் கொண்டுவரப்பட்ட போராட்ட பேனர்களை போலீசார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்

பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வருகை தந்து அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு செல்போன் கோபுரம் மீது ஏறி அவரை கீழே இறக்கி வரவழைத்தனர். பின்னர் அவரின் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.