• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மகாலெஷ்மி ஆலயத்தில் சதசண்டி யாகம்..,

ByM.JEEVANANTHAM

Sep 22, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜதுர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 75ம் ஆண்டு சதசண்டி யாகம் இன்று கணபதி பூஜையுடன் துவங்கியது. ஒன்பது நாட்களும் சதசண்டி யாகம் நடைபெற்று தொடர்ந்து யாகத்தில், புனித கடங்கள் அமைக்கப்பட்டு நவசண்டி யாகம் நவக்கிரக யாகம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்படும், முதல் நாளான இன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் குடும்பப் பெண்ணுக்கு செய்யப்படும் சுகாசினி பூஜை, குழந்தைக்கு செய்யப்படும் கன்னியா பூஜை, பிரம்மச்சாரிக்கு செய்யப்படும் வடுகபூஜை ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.