திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதா கிருஷ்ணன்
செய்தியாளர்கள் சந்தித்து பேசும்போது,

- வரக்கூடிய 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க திமுக அச்சம் அடைந்துள்ளது.
- இல்லாத குற்றத்தை கண்டுபிடித்து திமுக சொல்கிறது.
- தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி நிதி கிடைக்க வேண்டும், பள்ளி கூடங்கள் மூடுவதற்கு திமுக தான் காரணம்,
- அரசு பள்ளி மூடப்படுவதற்கு அங்கு மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்கவில்லை. அதனை தனியார் பள்ளிகள் போல தரம் உயர்த்த வேண்டும்.
- பள்ளிகள் மூடப்படுவது திமுக அரசு மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.
- திமுக நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
- ஜி எஸ் டி குறித்த கேள்விக்கு நாளைய தினம் சரித்திர பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டியது
- நாலரைவருடமாக அடிப்படை தொண்டர்களுக்கு கூட திமுக கசப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. அதை சமாளிக்க தொண்டர்களிடம் இருந்து தப்பிக்க வழி கண்டு பிடிப்பார்கள் எனவும் தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்துக்கொண்டு உள்ளது.
மற்ற மாநிலங்கள் இந்திய மீனவர்கள் எனவும் தமிழ்நாட்டில் மட்டும் தமிழக மீனவர்கள் என்று பாஜக கூறுகிறது குறித்து விஜய் கூறியது குறித்த கேள்விக்கு
- அது நீண்ட கால பிரச்சனை எனவும் தமிழ் மீனவர்கள் எங்கள் குழந்தைகள் என தெரிவித்தார்.