உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி இன்று மாலை வேதாரண்யத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

முன்னதாக கும்பகோணத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வருகைதந்த அவர் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாட்டில் ஈடுபட்டார். நாகூர் தர்கா வருகைதந்த அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பாக தொப்பி அணிவித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் வழிபாடு நடத்திய அவர், மறைந்த நாகூர் தர்கா டிரஸ்டி காமில் சாஹிப் அடக்கஸ்தளத்தில் மலர்தூவி மரியாதை மரியாதை செய்தார்.

பின்னர் தர்காவைவிட்டு வெளியே வந்த அன்புமணியிடம் திமுக – தவெக இடையே போட்டியென விஜய் பேசியது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார். பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று நாகூர் ஆண்டவர் தமிழ்நாட்டிற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார் என பேட்டியளித்து அங்கிருந்து புறப்பட்டார்.