மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுக்குத்தகை கரிசல்குளம் விலக்கு உள்ளது.

மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் ராமச்சந்திரன் ஓட்டி சென்றா்.
தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் திரும்பிபோகுது தூத்துக்குடியில் இருந்து வந்த தார் கலவையை ஏற்றி வந்த லாரி பஸ்சின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் அரசு பஸ் சாலையில் கவிழ்ந்தது. பஸ்சின் பின்புறமாக மோதியததில் லாரியும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ்ஸில் டிரைவர் கண்டக்டர் மற்றும் சில பயணிகள் மட்டுமே இருந்தனர் காயமடைந்த ஓட்டுநர், நடத்துனர் சிறிய காயங்களுடன் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக மதுரை தூத்துக்குடி நெடுஞ் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
