தாம்பரம் மாநகர காவல் காவல், பள்ளிகரணை காவல் மாவட்டம், பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை பின்புறம் உள்ள மதுபானபாரில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

அரசு மதுக்கடைகளை திறக்க நேரம் விதித்துள்ள நிலையில் பகல் 12 மணிக்குள்ளாகவே விற்பனை களைகட்டியுள்ளது.
இதனை தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.