சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறந்து விளங்கும் 1000 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி வேல்ஸ் பல்கலைக்கழக தலைவர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்றது,

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதுமையாக கற்பித்தலில் சிறந்து விளங்கிய மைல்லாப்பூர் தனியார் உயர் நிலைப்பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன்,கல்வி தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கிய பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளி ஆசிரியர் ரவி காசி,சிறப்பு கல்வியில் சிறந்து விளங்கிய சென்னை காது கேளாதோர் பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி,உத்வேகம் தரும் தலைமை மருத்துவம் என்பதில் சிறந்து விளங்கிய தலைமை ஆசிரியர் தூத்துகுடியை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ்,வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை கோயம்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் அவர்களுக்கு என சிறந்து விளங்கிய ஐந்து ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டுனார்,
பின்பு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்….

தமிழ்நாடு முதலமைச்சர் ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர்கள் கூறுவத்றக்கு காரணம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தவுடன் சிலர் பெற்றோர்கள் தற்போது வரை அந்த பள்ளி வளாகத்திற்க்கு செல்லாமல் இருப்பார்கள் காரணம் ஆசியர்கள் மீது இருக்கும் நம்பிக்கை அந்த நம்பிகையை ஆசிரியர்கள் காப்பாற்ற வேண்டும்,
தனியார் பள்ளியில் இருப்பவர்கள் அரசு பள்ளியில் இருப்பவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து கற்று கொள்ளவேண்டும் இரண்டுமே மாணவர் சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான்,

இந்த முறை செப்டம்பர் ஐந்தாம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கான ராதாகிருஷ்ணன் விருது துனை முதல்வர் அவர்களால் வழங்கபட்டதை போல் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் சர்வதேச இளங்கலை கல்வி பள்ளிகளிகள் வேலை செய்யும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கபடும் என்று தெரிவித்தார்.