பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகளும்இ தலைவர்களும் வெளியேறி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாழ பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு கொடுத்து அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காமல் செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கிய நிலையில், டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை உருவாக்கினார் செங்கோட்டையன்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். அவரது திடீர் டெல்லி பயணம் காரணமாகவும். அவர் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சி ஒன்றிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன் விதித்த கெடுவும் இன்றுடன் (செப்.15) முடிவடைகிறது. இந்தச் சூழலில் நாளை (செப் – 16) அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கச் செல்வதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்
