• Thu. May 14th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தேனி அருகே 75 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பண்டாரவூத்து பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருசநாடு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் பண்டாரவூத்து பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் புதருக்குள் 3 மூடைகளில் சுமார் 75 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த உதயவன், வருசநாடு அருகே உள்ள பண்டாரவூத்து கிராமத்தை சேர்ந்த ஜோதிபாசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.