தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியில் 20 வது கல்வி ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி லிட்டில் பிளவர் பள்ளிகள் மற்றும் சான் விகா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பள்ளியின் செயலாளர் மாத்யூ ஜோயல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். விஜய் ஆனந்த் இலவச மருத்துவ முகாமை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சிறப்பு மருத்துவர்கள் டி. அன்பு குமார்,பொது மருத்துவர் கே. ராஜலட்சுமி,பல் மருத்துவர் ராதாகிருஷ்ணன், கண் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர். நிவேதிதா மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆய்வக கண் பரிசோதனையாளர்கள் ஆகியோர் முகாமிற்கு வருகை தந்து பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர் .பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் மற்றும் நிர்வாகி தமயந்தி அவர்கள் மருத்துவர்களை கௌரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கினர்.
பள்ளியின் முதல்வர்கள் உமாமகேஸ்வரி மற்றும் லதா ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தி லிட்டில் பிளவர் பள்ளிகள் மற்றும் சான் விகா மருத்துவமனை நினைவாக தண்ணீர் பாட்டில்,பிஸ்கட், பற்பசை, சோப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
பொதுமக்கள்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா,கவிதா, ராகினி,திவ்யா, பானுப்ரியா, தமிழ் செல்வி, தெய்வ நிரஞ்சனா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர்கள் அனைவரும் உடனிருந்தனர் .