தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் கரட்டில் வெங்கடாஜபதி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சுமார் 700 ஆண்டுகளைக் கொண்ட பழமையான கோயில் ஆகும்.
இந்தக் கோயிலை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஓன்றினைந்து அர்ச்சகர் நியமித்து, பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மர்மநபர்கள் வெங்கடாஜலபதி திருக்கோயில் அருகே 150 அடிக்கு அருகே தர்ஹாவில் பணிகள் நடைபெற்றுள்ளது.
அப்போது, வெங்கடாஜலபதி திருக்கோயில் நிர்வாகத்தினர் ஆட்சியர், சார்பு ஆய்வர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை கந்திரி விழா நடைபெறுவதாக தகவல் வந்ததையடுத்து இந்து முன்னணி நிர்வாகத்தினர் சார் ஆட்சியர், வட்ட துணை காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் செப்.3 ஆம் தேதி புகார் அளித்தனர்.
ஆனால், 9 ஆம் தேதி இரவு வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் இறைச்சி விருந்து நடைபெறுவதற்காக பணிகள் நடைபெற்றதாம். இதையறிந்த கிரா மக்கள், இந்து முன்னணி, பாஜக வினர் தாமரைக்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தர்ஹாவில் இருந்து வந்துள்ள அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழைய நிலையில் இருந்தது போல் வழிபாடு செய்யலாம், ஆனால், புதியதாக ஒலி பெருக்கி வைத்து, விருந்து அளித்து, விழா நடத்தக்கூடாது என இந்து அமைப்பினர், பாஜகவினர் மற்றும் கிராமமக்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் தெரிவித்தனர். ஆனால், காவல்துறையினர் சைவ விருந்திற்கு அனுமதி வழங்கினர்.
இதையறிந்து தர்ஹா நிர்வாகத்தினர் புதன்கிழமை விருந்து வழங்கினர். இதையறிந்த கிராமமக்கள், இந்து முன்னணி, பாஜகவினர் வாயிலிலும், கண்களிலும் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிராமக்கள், கோயிலில் வழிபாடு செய்ய புறப்பட்டனர். அப்போது, காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. ஆனால், கோயிலுக்கு செல்ல முயன்றனர். இதையடுத்து 14 பெண்கள் உள்பட 43 பேரை போலீஸôர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அப்போது, இந்து முன்னணி, பாஜக மற்றும் கிராம மக்களை காவல்துறையினர் தாக்கினார்கள். அதே போல், இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் இந்து முன்னணி, பாஜகவினரை வெளியே அனுப்பிவைத்தனர். மேலும், தர்ஹா நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், சிலர் மர்மநபர்கள் கோயில் வளாகத்தில் சென்று வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சென்று வரும் மர்மநபர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், இந்தப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.