• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

செப்.13 முதல் 16 வரை ரேஷன் பொருள்கள் விநியோகம்

Byவிஷா

Sep 11, 2025

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், செப்டம்பர் 13 முதல் 16 வரை ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்குமேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று, செப்டம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட பொருட்கள் வரும்13 முதல் 16-ம் தேதிவரை விநியோகிக்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியை அறிந்துகொள்ளலாம்.
இதில் செப்.13, 14, 15 ஆகிய 3 நாட்களில் மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளிலும், செப்.13 முதல் 16 வரை 4 நாட்களும் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர். அண்ணா நகர்மற்றும் ஆலந்தூர் பகுதிகளிலும் வீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.