வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ,தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சண்முகபுரம் பகுதியில் உள்ள ஓடையில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்றபோது மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள் .அதில் சண்முகபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (20) என்பவர் பிடிபட்டார். மேலும் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி எந்திரம், மூன்று டிராக்டர், ஒரு யூனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர்.
ஏழாயிர்ம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து சண்முகபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (42 ),சதீஷ் (43) ,பார்த்திபன் (40), ரஞ்சித் (40) மற்றும் இ.டி ரெட்டியபட்டியை சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் ஜான் (50) மற்றும் டிரைவர் ஆபிரகாம்( 38), விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த உஷா( 44) ஆகிய எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.