அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட திருமானூர் ஒன்றியம், அன்னிமங்கலம் ஊராட்சியில் , அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ. சங்கர் வழிகாட்டு தலின் படி , மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம் ஆர் பாலாஜி தலைமையில் இளைஞர் காங்கிரஸார், 217- பாக எண்ணிற்கு உட்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் வீடுவீடாக சென்று , அனைத்து வாக்காளர்களையும் சந்தித்தனர்.

இந்நிகழ்வின் போது, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை தவிர்க்கவும்,போலி வாக்காளர்கள்,இரண்டு அடையாளஅட்டைகள்,இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் இருந்தால் கண்டுபிடிப்பது, பெயர் விடுபட்டிருத்தல்,புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை எண்ணை தெரிவித்தல் போன்றவற்றை இளைஞர் காங்கிரசார் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் பாளையப்பாடி கிராம காங்கிரஸ் கமிட்டி ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் திருமானூர் வட்டார தலைவர் பாரதி மற்றும் இளைஞர் காங்கிரஸார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












; ?>)
; ?>)
; ?>)