பாரதிய ராஷ்ட்ரிய பார்வர்ட் பிளாக் கட்சியின் (BRFB) தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பெருங்குடியில் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி. சிவபிரசாத் ஜி தலைமையில் தமிழக நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தமிழ் மாநில தலைவராக முத்துமணிகண்டன், தமிழ் மாநில துணைத்தலைவராக முத்துராமலிங்கம் மாநில குழு உறுப்பினர்களாக சக்திவேல் மதுரை மாவட்டம் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக வீரமணி தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து மேற்கு மாவட்ட செயலாளர் காசிநாதன் தேர்வு மேலும் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் மதுரை மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாரதிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய செயலாளர் சிவ பிரசாத் ஜி கூறுகையில்:

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிந்தனைகளை வைத்து தொடங்கப்பட்ட அரசியல் கட்சி இது. தமிழக மாநிலத் தலைவராக முத்து மணிகண்டன் பொறுப்பேற்றுள்ளார் அவருக்கு கீழ் உன் பத்தொன்பது நிர்வாகிகள் பொறுப்பேற்கின்றனர்.
தமிழகத்தில் நேதாஜியை லட்சக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். ஆனால் சுபாஷ் சந்திர போஸின் சிந்தனைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றவிலை. இந்தக் கட்சியில் சாதி, மத, சமய , பாலின பாகுபாடுகள் இருக்காது நேதாஜியின் சிந்தனைகளை கண்டிப்பான முறையில் பின்பற்றும் கட்சி இது.
எங்களுக்கு 10 பிரதான கோரிக்கைகள் உள்ளது அதில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் ராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும், மேலும் அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் மற்றும் ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 5 ஆயிரம் மாதம் ஆயிரம் பேரும் பெண்கள் முதியோர் விதவை உதவித்தொகைகளை ஆயிரத்தில் இருந்து 3000 ஆக உயர்த்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வோம்.
மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் முக்கிய கோரிக்கையாக உள்ள மும்மொழிக் கொள்கை.
அதில் முதல் மொழி தமிழ் இரண்டாம் மொழி ஆங்கிலம் மற்றும் மூன்றாம் வழி ஹிந்தி தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் இந்தியாவில் உள்ள வேறு எதுவும் ஒரு மொழியை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் .
மேலும் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். தற்போதைக்கு கூட்டணி குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
கொல்கத்தா விமான நிலையத்திற்கு சுபாஷ் சந்திரபோஸ் பெயர் வைக்கப்பட்டுள்ளது அதேபோல் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும்.
மேலும் இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகைப்படங்களை வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என சிவபிரசாத் ஜி கூறினார்.