திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு பகுதியில் நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் அதனால் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஜன்னத்துல் பிர்தௌஸ் ராஜா முகமது தலைமையில் ,அப்பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிப்பதற்காக சென்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மனு அளிக்க வந்ததால் சார்பு ஆய்வாளர் விஜய் உள்ளிட்ட போலீசார் மனு அளிப்பதற்கு எதற்காக 50க்கும் மேற்பட்டோர் வந்துள்ளீர்கள் என கேட்டு தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் டிட்டோ விடம் வார்டு பொதுமக்கள் ,அதிமுகவினர் ,தவெகவினர் ,பாஜகவினர் மனு அளித்தனர். உடனடியாக அனைத்து வார்டு உறுப்பினர்கள் ,அதிகாரிகளுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றதாகவும் ,உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். அடுத்தடுத்து அரசியல் கட்சியினர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.