விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த சில தினங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதனால் மாரியம்மன் கோவில் பஜார் செல்லும் வழியில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிறப்பு படுகின்றனர். ஏற்கனவே குருகலான சாலையாக உள்ளது. இந்நிலையில் குடிதண்ணீர் வீணாக செல்வதால் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றன.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.