இன்று இரவு 9:57மணிக்கு ஆரம்பமாகி 1:26 மணியளவில் முடிவடை சந்திர கிரகணம் முடிவடைகிறது .
இன்று மதியத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் நடைகள் அடைக்கப்பட்டு மீண்டும் நாளை காலை வழக்கம் போல் கோவில் நடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சுற்றி வருகின்றனர். மேலும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் கோவில் சுப்ரமணிய சுவாமி தேவசேனா உற்சவர் மதுரைக்கு சென் நிலையில்
இன்று மதியம் 12 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்ப உள்ள நிலையில் சுப்ரமணிய சுவாமி கோவில் வந்து சேர்ந்தவுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)