மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார். இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் கொண்ட கட்டமாக கட்டப்படவுள்ளது. தரைத்தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவர் அலுவலகம், மன்றக் கூட்ட அரங்கம் மற்றும் தேர்தல் பிரிவு கொண்ட தளமாகவும், முதல் தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பொறியியல் பிரிவு மற்றும் கோப்புகள் பராமரிக்கப்படும் பிரிவு கொண்ட தளமாகவும், இரண்டாம் தளமானது காணொளி காட்சி கூட்ட அரங்கு கொண்ட தளமாகவும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பின்னர் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்தார். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கொடிமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பண்ணையில் ஆவி 470, பூவரசு 331, புங்கன் 2050, நாவல் 105, பனங்கன்று 794, வேம்பு 425, இலவம்பஞ்சு 2771, வாகை 2503, வேங்கை 250, புளி 500, மயில்கொன்றை 517, புன்னை 70 உள்ளிட்ட 10,786 மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் அய்யர்புதூர் முதல் கூளப்பாண்டி வரை 1.9 கி.மீ நீளத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வெளிச்சநத்தம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டும்‘முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம்’ கீழ், ரூபாய் 2.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
மேலும், மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் கொண்ட கட்டமாக கட்டப்படவுள்ளது. தரைத்தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவர் அலுவலகம், மன்றக் கூட்ட அரங்கம் மற்றும் தேர்தல் பிரிவு கொண்ட தளமாகவும், முதல் தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பொறியியல் பிரிவு மற்றும் கோப்புகள் பராமரிக்கப்படும் பிரிவு கொண்ட தளமாகவும், இரண்டாம் தளமானது காணொளி காட்சி கூட்ட அரங்கு கொண்ட தளமாகவும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்கநர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.வானதி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.