விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த பள்ளப்பட்டி ஊராட்சி ஐயப்பன் நகரில் அருள்மிகு தவக்கோலம் கொண்ட முனிசாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சரு மான கே .டி. ராஜேந்திர பாலாஜியிடம் திருப்பணி குழு கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வேண்டுகோளை ஏற்று தவக்கோலம் கொண்ட முனிசாமி கோவில் திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற ஆன்மீக பணிகளுக்கு தாராளமாக நிதி உதவி வழங்கும் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கினார்.
ஒரு லட்சம் ரூபாய் நிதியினை பெற்றுக் கொண்ட திருப்பணி குழு கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.