செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.அனு, துணைத் தலைவர் எஸ்.சங்கீதா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கெஜலட்சுமி சண்முகம், துணைத் தலைவர் சுமதி லோகநாதன், 4வது வார்டு உறுப்பினர் உஷா பிரபு, ஆகியோர் கலந்து கொண்டு இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்து அதனைத் தொடர்ந்து மேலாண்மை குழு உறுப்பினர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது
இறுதியில் தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி மேலாண்மை குழு அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்தார்.