தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 13.38 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவம் சார்ந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திலேயே புதிதாக 2.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிடி ஸ்கேன் பிரிவை துவக்கி வைத்தார்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெரும் நிலையில்

தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில்கொண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையிலும்
நவீன முறையிலான இந்த சி.டி ஸ்கேன் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கம்பம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.