• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

“உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு”.,

BySeenu

Sep 3, 2025

மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்று உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 80க்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள சமூக நல கூட அரங்கில் நடைபெற்றது.

முன்னதாக முகாமின் துவக்க விழா,80 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவரும் ஆன மாரி செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இதில், தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ,மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன்,மத்திய மண்டல துணை ஆணையர் செந்தில் குமரன்,மண்டல தலைவர் மீனா லோகு, ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

அரசு சேவைகளை பொதுமக்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்ப்பதற்காக நடைபெற்ற இதில்,சாதி சான்று, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் முகாமில், அரசு அலுவலர்கள் நேரடியாக கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.