102 & 155377 ஒரு கட்டணமில்லாத சேவை. இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ், EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது. சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம பின்புறம், DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியை தலைமை இடமாகக் கொண்டு 108 அவசரகால சேவை மையம் இயங்கி வருகிறது.

EMRI GREEN HEALTH SERVICES நிறுவனம் 102 & 155377 ஓட்டுனர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது. அதற்க்கான விவரங்கள் கீழ்வருமாறு;
பணியிடம்: தமிழகத்தின் எந்த பகுதியிலும் நியமனம் செய்யப்படும்
பணி நேரம்: 12 மணி நேர ஷிப்ட் முறையில். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும்.
வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அவரவர்களே செய்துக் கொள்ள வேண்டும். இதற்காக தனியாக படி எதுவும் வழங்கப்படமாட்டாது
ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகள்:
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி வயது: நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பாலினம்: ஆண் மற்றும் பெண்.
உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்
ஓட்டுனர் தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் Badge வாகன உரிமம்.
அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்..
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும்.
தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2. தொழில்நுட்பத் தேர்வு 3. மனிதவள துறை நேர்காணல் 4. கண்பார்வை & மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு 5 .சாலை விதிகளுக்கான தேர்வு .
மாத ஊதியம்: ரூ.21,120/- (மொத்த ஊதியம்) .
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் ( பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்)
மேலும் விவரம் அறிய விரும்புவோர் 044-28888060, 75, 77 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.













; ?>)
; ?>)
; ?>)