சிவகாசி பஸ்ஸில் ஏறி சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காணாமல் போன சிறுவன் குறித்து சாத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் அறிவிப்புகள் செய்திருந்தனர். அதைப் பார்த்த பெற்றோர் தங்களுடைய மூன்று வயது சிறுவன் மாதவன் எனவும் சிவகாசி ரிசர்வ் லைன் காமராஜர் காலனி சேர்ந்த மாதவனின் அப்பா பாண்டி என சாத்தூர் போலீசாரிடம் தெரிவித்ததால் உடனடியாக போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் .

காணாமல் போன சிறுவனை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைத்ததற்கு சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் போலீசாரை பாராட்டினார்.