விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து சங்கரபாண்டியாபுரம் ஊரணியில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை முக்கிய வீதியின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள கிணற்றில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் கரைக்கப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)