மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி ஆறாவது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் உள்ள மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது.

சுகாதார வளாகத்திற்குள் பெண்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எறிந்ததால் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் தீப்பற்றி எரிந்த இடத்திற்கு வந்த மின்வாரிய பணியாளர் அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின்சாரத்தை துண்டித்து பின்பு தீப்பற்றி எரிந்த மின்சார பெட்டியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இரவு நேரம் சுகாதார வளாகத்திற்குள் பெண்கள் குழந்தைகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறினர். மின்சாதன பொருட்களை முறையாக பராமரிக்கப்படாதது தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சோழவந்தான் பகுதியில் உள்ள மின்சார பெட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் பழுதடைந்த மின்சாதன பொருட்களை மாற்றி விட்டு புதிய மின் பெட்டிகளை பொருத்த வேண்டும் என கூறுகின்றனர். 8 மணி என்பதால் பொதுமக்கள் உஷாராகி தீ விபத்தை தடுத்ததாக கூறினர். மின்வாரிய பணியாளர் கூறுகையில் வீடுகளில்அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்தும் போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தகவல் தெரிந்து உடனடியாக தீயை அணைத்து விட்டதாகவும் கூறினார்.