மதுரை மாவட்டம் பரவையிலுள்ள மங்கையற்கரசி பொறியியல் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் DR.P.அசோக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர் இன்ஜினியர் A .சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் Dr.J.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி A.D. ஜெகதீஷ் சந்திரா கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற அணைத்து துறை மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கி கெளரவித்தார்.மேலும் அவர் கல்லூரியை சார்ந்த 200 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பொறியாளர்களே வருங்கால இந்தியாவின் தூண் என்றும் அத்தகைய பொறியாளர்கள் நாட்டின் நலன்கருதி உயர்ந்த சிந்தனையோடும், நேர்மையோடும், முனைப்புடனும், ஆற்றலுடனும் அயராது பாடுபடவேண்டும் என்றும் பட்டம் பெரும் மாணவ மாணவியர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, தலைமைப் பொறுப்புகளையேற்று, சிறப்புமிகுந்த இந்த கல்லூரிக்கு பெருமைசேர்க்கும்படி செயலாற்ற வேண்டும்,பட்டதாரிகள் அனைத்து துறைகளிலும் தங்கள் ஆற்றலை மேம்படுத்தி தங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தவும், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்,கல்வி என்பது அனைவருக்குமான மிகப்பெரிய சொத்து எனவும், பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாக மாறவேண்டுமென்றும் அவர்கள் மூலதனத்தை மட்டும் நம்பாமல் தங்கள் திறமையையும் அறிவையும் நம்பி உழைத்து வெற்றிபெற வேண்டும். நல்ல எண்ணங்களே நல்ல மனிதர்களை உருவாக்கும் எனவே நல்ல எண்ணங்களை வளர்த்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அலுவலர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)