• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குளிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பலி..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2025

மதுரை பசுமலை கிருஷ்ணாபுரம் பகுதியில் சேர்ந்தவர் டேவிட் ராஜ் இவரது மனைவி நாகம்மாள் பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் அட்டெண்டர் ஆக பணிபுரிகிறார். இவரது மகன் நவீன்குமார் வயது 15 இவர் சிஎஸ்ஐ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினமான இன்று ஐந்து நண்பர்களுடன் மாடக்குளம் கண்ணில் குளிக்கச் சென்றார்.

அப்போது நவீன் குமார் சேரு ஆழமுள்ள பகுதிக்கு சென்று குளிக்கும்போது சேட்டில் சிக்கினார் அங்கிருந்து சென்று பெற்றோருடன் தகவல் தெரிவித்தனர். அதனை எடுத்து நாகம்மாள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்றனர். சேட்டில் சிக்கிய மாணவர் நவீன் குமாரை நிற்கும்போது பலியானது தெரியவந்தது. இதனை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நவீன் குமாரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.