விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கிளாம்ப் கம்பெனியில் பத்துக்கும் மேற்பட்டோர் கிளாம்ப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் வயது 46 என்பவர் கிராம்பு தயாரிப்பதற்காக தகடு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்தார். இதனை அறிந்த உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் அவரை பத்திரமாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மகேந்திரன் என்பவருக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.