விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறையின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் செல்வராஜன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி, மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு முளைகட்டிய தானியங்கள் ,லட்டு ,கொழுக்கட்டை, சுண்டல் , உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கினார்கள்.

தொடர்ந்து முறைப்படி யாகம் வளர்க்கப்பட்டது. சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை மாணவர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.