மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இன்றைய இளைய தலைமுறையை அலைபேசி பயன்படுத்துவதிலிருந்தும், போதை பொருட்கள் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி படைப்பாற்றல் திறனை வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் சண்முகவேலு தலைமை தாங்கினார். பேராசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்நபி வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் மூரா வாசிப்பை வசியப்படுத்தும் வழிகள் மற்றும் கவிஞர் இரா.இரவி படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும் வழிகள் என்ற தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் முனைவர் அனார்கலி, தமிழ் ஆர்வலர் ஆதித்தா, பள்ளியின் புத்தக வாசிப்பு இயக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழாசிரியர்கள் தெளபிக் ராஜா மற்றும் முகமது அஸாருதீன் செய்திருந்தனர்.