மதுரை மாவட்டம் சோழவந்தான் 13 வது வார்டு சிவன் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்திற்கு முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் மின் வயிர்களும் குறுக்கும் நெடுக்கமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து இந்த பகுதி பொதுமக்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர். மழைக்காலம் துவங்கி விட்டதால் சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு சிவன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்து மின் வயிர்களையும் சரி செய்ய வேண்டும்.

மேலும் மின்கம்பத்திற்கு கீழே இந்த பகுதிகளில் தேங்கும் குப்பைகளை வந்து கொட்டுவதால் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பணி செய்யும்போது மின் கம்பங்கள் மற்றும் மின்சார வயர்களால் துப்புரவு பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக கூறுகின்றனர். ஆகியால் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் மற்றும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பதாகவும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.