• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஒத்தையடி பாதை வழியாக காட்டு யானை!!

BySeenu

Aug 24, 2025

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வந்த காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு விலை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போளுவாம்பட்டி வனத் துறையினர் காட்டுயானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த வனப் பகுதிக்கு விரண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் தேவராயபுரம் மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் ஒத்தையடி பாதை வழியாக ஜீப்பில் காட்டு யானையை விரட்டிக் கொண்டு சென்று உள்ளனர்.

ஒரு கட்டத்தில் காட்டு யானை நின்று வனத் துறையின் வாகனத்தை பார்த்து ஆவேசமாக ஓடி வந்து இடித்து தள்ளியது. அதில் வண்டியின் முன் கண்ணாடி உடைந்து சிதைந்தது சுதாகரித்துக் கொண்ட வனத் துறையினர் வாகனத்தை பின்னே எடுத்துச் சென்று உயிர் தப்பினர்.

காட்டு யானை விரட்டுச் சென்ற வனத் துறையினர் வாகனத்தை யானை ஆக்ரோஷமாக தாக்கும் வீடியோ அப்பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.