சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகின்ற விதமாக “வெற்றி நமதே” என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய விலையில்லா கல்வி வழிகாட்டி புத்தகம் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகாசி அருகே விளாம்பட்டி, மாரனேரி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி புத்தகங்களை இலவசமாக வழங்கினார்.

அப்போது பேசியது விருதுநகர் மாவட்டம் என்றாலே தமிழ்நாட்டுக்கு வருவாய் தரும் மாவட்டமாயிருந்து தொழிலிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று முதலிட மென்ற வரலாற்றை பிடித்திருந்தது. ஆனால் இன்றைய தினம் தொழிலிலும், கல்வியிலும் விருதுநகர் மாவட்டம் பின்தங்கியுள்ளதாகவும் பின் தங்கியுள்ள விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் முன்னோக்கி கொண்டு வர மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கைத்தட்டத்தை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கல்வி வழிகாட்டி கையேடு புத்தகங்களை ஆரவாரத்துடன் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் கூறும்போது:- கல்வி வழிகாட்டி கையேடு புத்தகம் தங்களின் படிப்பிற்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கி, தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதால் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.