கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்..
இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சுமார் 34 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஒளி ஒலி ஆகியவை மேம்படுத்தப்பட்டு இன்று மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது இதில் தேமுதிக மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேமுதிகவினர் திரையரங்குகளுக்கு சென்று படத்தை மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் திரைப்படத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். முன்னதாக திரையரங்கிற்கு சென்ற தேமுதிகவினர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க என்று உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இதில் அவைத்தலைவர் பொன்னுராஜ்,பொருலாளர் ராகவலிங்கம்,துணை செயலாளர்கள் பழனி மகளிர் கற்பகம்,பாக்ஸ் மூர்த்தி,அரவிந்த், பன்னீர்செல்வம், தண்டபானி,கேப்டன் குணா,மகளிர் அணி தனலட்சுமி,இந்திரா, சக்திவேல் துணைச் செயலாளர் வடிவேல் தங்கவேல் செல்வம் பகுதி மகளிர் அணி செயலாளர் அழகுராணி முத்தம்மாள் தனலட்சுமி சந்திரா வட்டக் கழக செயலாளர் ராமச்சந்திரன் முனியப்பிள்ளை பாண்டியன் காளிமுத்து மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் வட்டகழக செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள் அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு கேப்டன் பிரபாகரன் படத்தை கண்டு களித்தனர்.