விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிக்காளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 48 ) பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதற்காக சத்யா நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த நபர் எழுதிய தாளை காண்பித்து முகவரி எங்கே இருக்கு என விசாரித்துக் கொண்டிருந்த மர்ம நபர் திடீரென மாரியம்மாளை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த ஏழு பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். கீழே விழுந்ததில் மாரியம்மாளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.இது குறித்து கணவர் மாரிக்காளை வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை இட்டனர்.
சோதனையில் பேர்நாயக்கன்பட்டி அருகே உள்ள தீப்பெட்டி ஆலையில் பணிபுரியக்கூடிய சிவகாசி பர்மா காலனியை சேர்ந்த மதன்குமார் ( 23 ) என்பது தெரிய வந்தது.. உடனடியாக போலீசார் விசாரணை நடத்தியதில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். உடனடியாக இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மதன்குமாரை கைது செய்து எழு பவுன் நகையை பறிமுதல் செய்தார்.
ஒரே நாளில் நகை திருடிய நபரை கைது செய்து நகையை பறிமுதல் செய்த போலீசாரை சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் பாராட்டினார்.