விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அருகே உள்ள மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கணஞ்சாம்பட்டி, வனமூர்த்திலிக்காபுரம், சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். .

அதில் மகளிர் உரிமைத் தொகைக்கான 282 மனுக்களும், பட்டா மாறுதல் சம்பந்தமாக 32 மனுக்களும், மற்றும் முதியோர் உதவித்தொகை, விதவை பென்ஷன், குடும்ப அட்டை, உள்பட மனுக்கள் பெறப்பட்டன. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி ,தாமோதரன் கண்ணன், அலமேலு, ஆகியோர் மனுக்களை பரிசீலனை செய்தனர். வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.